TOC

This article is currently in the process of being translated into Tamil (~97% done).

Styles:

Introduction to WPF styles

நீங்கள் இதற்கு முன் HTML மற்றும் CSS-ஐ பயன்படுத்தி வலைத்ததளத்தை உருவாக்கி இருந்தால், XAML ம் HTML-ஐ போன்றது என்பதை விரைவில் உணர்வீர்கள். Tag-ஐ பயன்படுத்தி உங்கள் பயன்பாட்டின் கட்டமைப்பை வரையறுக்கிறீர்கள். HTML-ல் குறிச்சொற்களை உள்ளிருப்பு பாணி செய்வது போல, நீங்கள் உங்கள் அடிப்படையை ஒரு குறிப்பிட்ட வழியில் தோற்றமளிக்கும் வகையில், முன்புறம்(Foreground), எழுத்துரு அளவு மற்றும் பல போன்ற இன்லைன் பண்புகளைப் பயன்படுத்தலாம்.

ஆனால் மூன்று வெவ்வேறு டெக்ஸ்ட் பிளாக்கில் அதே எழுத்துரு அளவு மற்றும் வண்ணத்தைப் பயன்படுத்த விரும்பினால் அதை எவ்வாறு செய்வது? நீங்கள் விரும்பிய பண்புகளை நகலெடுத்து ஒட்டலாம். ஆனால் 50 இடங்களில் செய்ய வேண்டி இருந்தால், இல்லை வெவ்வேறு window க்களில் க் களில்? மேலும் எழுத்துரு அளவு 12 க்கு பதிலாக 14 ஆக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணரும்போது என்ன நடக்கும்?

WPF ஸ்டைலானது, HTML க்கு CSS எவ்வாறோ, அவ்வாறே XAML க்கு. பாணிகளைப் பயன்படுத்தி, நீங்கள் பண்புகளின் தொகுப்பைக் குழுவாகக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் ஒதுக்கலாம். CSSப் போல ஒரு பாணி மற்றொரு பாணியிலிருந்து பெறலாம்.

அடிப்படை பாணியின் உதாரணம்

இந்த அறிமுக அத்தியாயத்திற்கு ஸ்டைலிங் எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான மிக அடிப்படையான உதாரணத்தை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். பின் வரும் அத்தியாயங்களில் எல்லா விவரங்களையும் பற்றி அதிகம் பேசுவோம்,

<Window x:Class="WpfTutorialSamples.Styles.SimpleStyleSample"
        xmlns="http://schemas.microsoft.com/winfx/2006/xaml/presentation"
        xmlns:x="http://schemas.microsoft.com/winfx/2006/xaml"
        Title="SimpleStyleSample" Height="200" Width="250">
    <StackPanel Margin="10">
        <StackPanel.Resources>
            <Style TargetType="TextBlock">
                <Setter Property="Foreground" Value="Gray" />
                <Setter Property="FontSize" Value="24" />
            </Style>
        </StackPanel.Resources>
        <TextBlock>Header 1</TextBlock>
        <TextBlock>Header 2</TextBlock>
        <TextBlock Foreground="Blue">Header 3</TextBlock>
    </StackPanel>
</Window>

எனது ஸ்டேக் பேனலின் ஆதாரங்களுக்கான, நான் ஒரு பாணியை(Style) வரையறுக்கிறேன். இந்த பாணியை எல்லைக்குள் உள்ள அனைத்து டெக்ஸ்ட் பிளாக் கட்டுப்பாடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று WPF க்கு சொல்ல நான் டார்கெட் பண்பை பயன்படுத்துகிறேன். பிறகு நான் பாணியில் இரண்டு செட்டர் கூறுகளை சேர்க்கிறேன். இலக்கு கட்டுப்பாடுகளுக்கு குறிப்பிட்ட பண்புகளை அமைக்க செட்டர் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த விஷயத்தில் முன்புற(Foreground) மற்றும் எழுத்துரு அளவு(FontSize) பண்புகள். நாம் எந்த பண்பை குறிவைக்க விரும்புகிறோம் என்பதை Property பண்பு WPF க்கு சொல்கிறது, மேலும் மதிப்பு(Value) பண்பை விரும்பிய மதிப்பை வரையறுக்கிறது

கடைசி டெக்ஸ்ட் பிளாக் சாம்பல் நிறத்திற்கு பதிலாக நீல நிறத்தில் இருப்பதைக் கவனியுங்கள். ஒரு கட்டுப்பாடு ஒரு நியமிக்கப்பட்ட பாணியில் இருந்து ஸ்டைலிங் பெறக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்காக நான் அதைச் செய்தேன். கட்டுப்பாட்டில் உள்ளிட்ட இடத்தில் இதை மேலெழுத முற்றிலும் சுதந்திரம் உள்ளது. கட்டுப்பாட்டில் நேரடியாக வரையறுக்கப்பட்ட மதிப்புகள் எப்போதும் பாணி மதிப்புகளை விட முன்னுரிமை பெறும்.

சுருக்கம்

WPF பாணிகள் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை உருவாக்குவதை மிகவும் எளிதாக்குகின்றன, பின்னர் அதை பல கட்டுப்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றன. இந்த முதல் எடுத்துக்காட்டு மிகவும் உள்ளிட்ட இடத்தில் என்றாலும், அடுத்த அத்தியாயங்களில் முழுமையான பாணியை எவ்வாறு உருவாக்குவது என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.


This article has been fully translated into the following languages: Is your preferred language not on the list? Click here to help us translate this article into your language!