TOC

This article is currently in the process of being translated into Tamil (~97% done).

About WPF:

What is WPF?

wpf எனப்படும் Windows Presentation Foundation ஆனது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இப்போதைய அணுகு முறையாகும்.

GUI ஃப்ரேம்ஒர்க் எனப்படுவது என்ன? GUI என்பதின் முழு விரிவாக்கம் Graphical User Interface ஆகும். கம்ப்யூட்டரில் நாம் பணிபுரிவதற்கான இடை முகப்பை(Interface) விண்டோஸ் ஆனது GUI மூலம் நமக்கு வழங்குகின்றது. மற்றொரு உதாரணம் பிரவுசர் ஆனது நீங்கள் இந்த டாக்குமெண்டை பார்க்க உங்களுக்கு இடை முகப்பை (Graphical User interface) உங்களுக்கு வழங்குகின்றது.

லேபிள், டெக்ஸ்ட் பாக்ஸ் போன்ற GUI எலிமெண்ட்ஸ் கொண்ட பயன்பாடுகள் உருவாக்குவதற்கு GUI ஃப்ரேம் ஒர்க் நம்மை அனுமதிக்கின்றது. GUI ஃப்ரேம் ஒர்க் இல்லையேல் நாம் ஒவ்வொரு எலிமெண்டையும் வரையும் நிலை ஏற்படும். இது கடினமான வேலை என்பதால் GUI ஃப்ரேம் ஒர்க் ஆனது நமக்கு பயன்படுகின்றது. அதே போல் நிரலாளரும் பயன்பாடுகள் உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம்.

GUI ஃப்ரேம் ஒர்க்கானது நிறைய இருந்தாலும் டாட்நெட்டை பொறுத்த வரை Winforms மற்றும் WPF ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. WPF என்பது புதியதாகும். எனினும் Winforms என்பதும் பயன்பாட்டில் தான் மைக்ரோசாஃப்ட் வைத்திருக்கின்றது. இனிவரும் பாடத்தில் இவை இரண்டிற்கான வித்தியாசத்தை நாம் அறியலாம். இவை இரண்டும் ஒரே காரணத்திற்காகத் தான் பயன்படுகின்றது.அதாவது GUI அப்ளிகேசன்களை உருவாக்குவதற்கு.

அடுத்த பாடத்தில் Winforms மற்றும் WPF எனப்படுவதின் வித்தியாசத்தை நாம் அறியலாம்.